Admissions Are Open for the Academic Year 2026-27

ஹர் கர் திரங்கா 2026 – தேசியக் கொடி ஏற்றம்

ஹர் கர் திரங்கா 2026 – தேசியக் கொடி ஏற்றம்

பெரம்பலூர்: இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் (Ministry of Culture) முன்னெடுத்துள்ள நாடு தழுவிய பிரச்சாரமான “ஹர் கர் திரங்கா” (Har Ghar Tiranga) இயக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தின் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு வீடு மற்றும் அலுவலகத்திலும் தேசியக் கொடியை ஏற்றி, நாட்டுப்பற்றையும் தேசிய ஒற்றுமையையும் வலியுறுத்தும் இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தின் மேலாண்மைத் தலைவர், சேவைச் செம்மல் முனைவர் ம. சிவசுப்ரமணியம் அய்யா அவர்கள், கல்விக் குழுமத்தின் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.